பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள்.

பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள்.

உடலை பாதுகாக்க பல இயற்கை மருத்துவ டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உடலை பாதுகாப்போடு வைத்து கொள்வதற்கு பல இயற்கை மருத்துவ டிப்ஸ்களை பார்க்கலாம். நம் உடல் ஆரோக்கியமானது நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் தான் இருக்கிறது என்று பலருக்கும் தெரிகிறது இல்லை. நமது உடலை செயற்கையான வழிகளில் இல்லாமல் இயற்கையான வழி முறைகளில் எப்படி பாதுகாக்கலாம் என்று விரிவாக படித்து அறியலாம் வாங்க..!

வயிற்றில் உள்ள அமில சுரப்பி குறைய:

வயிற்று பகுதிகளில் அமில சுரப்பி குறைவதற்கு உணவருந்திய பிறகு தினமும் தண்ணீரில் சிறிதளவு கருப்பட்டியினை கரைத்து குடித்து வரவும். இதனால் அமில சுரப்பி வருவதை தடுக்கலாம்.

தொண்டை புண் முற்றிலும் குணமாக:

சிலருக்கு கார உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தொண்டையில் புண் ஏற்படும். அந்த தொண்டை புண் விரைவில் குணமாக துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டையில் ஏற்பட்ட புண்கள் முற்றுலுமாக நீங்கிவிடும்.

உடல் பருமன் குறைய:

சிலர் உடல் எடை அதிகமாக இருப்பதால் உடலை நினைத்து மிகவும் வருந்துவார்கள். இந்த நிலையை போக்குவதற்கு கருமிளகு தூள் 1/4 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 3 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி மூன்றையும் நீரில் நன்றாக கலந்து உடல் எடை அதிகம் உள்ளவர்கள் 3-4 மாதம் வரை தொடர்ச்சியாக குடித்து வர விரைவில் உடல் எடை மாற்றம் அடையும்.

இதுமட்டும் இல்லாமல் 3-4 மாதங்கள் வரை காலை உணவிற்கு முன்பு தினமும் 1 தக்காளி சாப்பிட்டுவர உடல் எடையானது குறைவதை நீங்களே அறியலாம்.

அடுத்து உடல் எடையினை குறைப்பதற்கு முழுமையாக வளர்ந்த கருவேப்பிலை இலையினை 10 முதல் 12 இலைகளை சாப்பிட்டு வர 3 அல்லது நான்கே மாதங்களில் உடல் எடை முற்றிலுமாக மெலிவடைந்து விடும்.

உடலை எப்போதும் ஆரோக்கியத்துடன் வைத்து கொள்வதற்கு அரிசி வகையான உணவுகள், உருளை கிழங்கு போன்றவைகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.

இதனால் உடலில் சிலருக்கு வாய்வு தொந்தரவுகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு மாறாக தினமும் கோதுமை சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

இருமல் தொல்லையிலிருந்து விடுபட:

குளிர் நேரங்களில் மற்றும் சாதாரண நிலையில் சிலருக்கு வறட்டு இருமல் பிரச்சனை விடாது இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்று உள்ளவர்கள் 3 கப் அளவு நீரில் வெற்றிலையும், மிளகையும் நன்றாக கொதிக்கவைத்து குடித்துவர விடாமல் இருந்த இருமல் நோய் குணமாகும்.

பல் வலியை போக்கும் இயற்கை மருத்துவம்:

பல் வலியால் அவதிப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட பல் வலி நீங்க துளசி இலை 2, உப்பு மற்றும் மிளகுத்தூள் சிறிதளவு எடுத்து மூன்றையும் சேர்த்து பல் வலி இருக்கும் இடத்தில் இதனை வைத்து அழுத்தி வரவேண்டும். இந்த முறையினை செய்து வந்தால் முற்றிலுமாக பல் வலி குறைந்து விடும்.

சருமத்தில் பரு, தழும்புகள் மறைய:

சில பெண்களுக்கு முக அழகு கெடுவதே இந்த முக பருக்கள் மற்றும் தழும்புகள். இதற்காக பல கிரீம்களை பயன்படுத்தி மேலும் மேலும் முக அழகினை வீணடித்து கொள்கிறார்கள்.

முக பருவை இயற்கையான வழியில் மாற்ற குளிக்கின்ற நீரில் துளசி இலைகளை போட்டு குளித்துவர விரைவில் முக தழும்புகள், பரு மாற்றம் அடைந்துவிடும்.

குழந்தைக்கு ஏற்படும் காய்ச்சல் / இருமல் நீங்க:

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமல் நீங்க நீருடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்துவர விரைவில் காய்ச்சல் மற்றும் இருமல் நீங்கும்.

அதோடு குழந்தை உடல் நன்கு வலிமையோடு இருக்க கேரட் மற்றும் தக்காளி சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தை உடல் வலிமையோடு இருக்கும்.

வயிற்று போக்கை குணப்படுத்தும் கொய்யா இலை:

வயிற்று போக்கு பிரச்சனையை குணப்படுத்த கொய்யா இலைகளை சாப்பிட்டு வர வயிற்று போக்கு தொந்தரவு விரைவில் குணமாகும்.

Useful natural medicine tips.

Many natural medicine tips to protect the body

Hello friends..! In today's post you can see many natural medicine tips to keep the body safe. Many people do not know that our physical health depends on the food we eat. Read on to learn more about how to protect our body in natural ways without artificial ways ..!

Decreasing the acid gland in the stomach:

Dissolve a small amount of black currant in water and drink it daily after meals to reduce the acid secretion in the stomach areas. Thus preventing the acid secretion from coming on.

Sore throat completely healed:

For some people, eating too much alkaline food can cause sore throat. The sore throat will heal quickly if you drink water with basil leaves daily and the sore throat will disappear completely.

Obesity:

Some people are very sorry to think of the body because they are overweight. To get rid of this condition, mix 1/4 teaspoon of black pepper powder, 3 teaspoons of lemon juice and 1 teaspoon of honey in water and drink it continuously for 3-4 months.

Not only this, eating 1 tomato daily before breakfast for 3-4 months will help you lose weight.

Next, eat 10 to 12 leaves of a fully grown caraway leaf to lose weight and lose weight completely in 3 or 4 months.

To keep the body healthy at all times it is better to avoid foods like rice and potatoes.

This can cause flatulence in some people. Instead you can take daily wheat based foods.

To get rid of cough harassment:

For some people, a dry cough may not be a problem during the cold season. For such people, boil betel and chilli in 3 cups of water and drink it to cure cough.

Natural Remedies For Toothache:

There will be no one who does not suffer from toothache. To get rid of such toothache, take 2 tulsi leaves, a little bit of salt and pepper, add all three and press it on the toothache. Doing this method will completely reduce toothache.

Pimples on the skin, scars disappear:

For some women, these facial pimples and blemishes can ruin their facial beauty. For this they use more and more creams and waste more and more facial beauty.

To change the facial pimples in a natural way, put basil leaves in the bath water and take a bath. The facial scars and pimples will change quickly.

Eliminate fever / cough in a child:

Adding a little honey to water to get rid of fever and cough in children will cure fever and cough quickly.

In addition, to keep the baby strong, add a little honey along with carrot and tomato juice to keep the baby strong.

Guava leaf cures diarrhea:

Eating guava leaves to cure diarrhea will cure diarrhea.


Post a Comment

Previous Post Next Post