திப்பிலி
திப்பிலி ஒரு மூலிகைத் தாவரமாகும். திப்பிலியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலில் பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் சம அளவு எடுத்து தேனில் கலந்து அரை டீஸ்பூன் அளவு காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும்.
பசும்பாலில் திப்பிலி பொடியை போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாயுத்தொல்லை நீங்கும்.
திப்பிலியை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அதில் அரை கிராம் எடுத்து தேனில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் தொண்டை கமறல், பசியின்மை குணமாகும்.
தோல் நீக்கிய சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து அரை கிராம் அளவு தேனில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் ஆகியவை குணமாகும்.
திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், பனங்கற்கண்டு நான்கையும் தலா 100 கிராம் அளவு எடுத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சைனஸ், தும்மல், தலைபாரம் போன்றவை குணமாகும்.
எலுமிச்சை சாறில் திப்பிலியை ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், ஏப்பம் போன்றவை குணமாகும்.
திப்பிலி பயன்கள் தொண்டை, குரல் வளம் சளி, ஜலதோஷம் போன்றவற்றால் தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பான குரல் ஏற்படுகிறது. இதனால் சரியாக பேச முடியாமல் போகிறது. திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு நீங்குவதோடு குரல் வளமும் மேம்பட செய்கிறது திப்பிலி.
மூலம் மலச்சிக்கல், ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவித்திரம் போன்றவை ஏற்பதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மூலம் ஏற்பட்டவர்கள் அது குணமாக திப்பிலி பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். திப்பிலியை நன்கு பொடி செய்து, அதனுடன் குப்பைமேனி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து திப்பிலி பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் சீக்கிரம் குணமாகும். –
கல்லீரல், மண்ணீரல் நமது உடலில் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நச்சுகளை நீக்குவதும், தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற காரியங்களை கல்லீரல், மண்ணீரல் ஆகியவை செய்கின்றன. உடலில் அடிபடும் போதும், அதிக அழற்சியாலும் இந்த இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட உள்ளுருப்புகளின் வீக்கம் தீர தீப்பிலி பொடியை சாப்பிட்டு வருவதால் தீர்க்க முடியும். சுவாச நோய்கள் ஆஸ்துமா, ப்ராங்கைட்டிஸ், மார்பு சளி போன்ற வியாதிகள் நமது நுரையீரலை பாதிப்பதாகும்.
இந்நோய்கள் வந்தால் சராசரியாக சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை தருகிறது. இத்தகைய நோய்கள் தீர திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரத்திலேயே மார்பு நுரையீரலை பாதிக்கும் அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களை தீர்க்க முடியும். காய்ச்சல் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறையும் போது ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. இச்சமயங்களில் உடலுக்கு பலம் தரக்கூடியதும், நோய்களை போக்க கூடியதுமான பத்திய மருந்துகளை சாப்பிடுவதால் நோய் பாதிப்பிலிருந்து நீங்க முடியும்.
திப்பிலி, சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிடுவதால் எப்படிப்பட்ட ஜுரம், காய்ச்சல் போன்றவையும் நீங்கும். மாதவிடாய் மாதவிடாய் காலங்களில் பல பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரித்து அவர்களை உடலளவில் மிகுந்த பலவீனமானவர்கள் ஆக்குகிறது.
இதற்கு தீர்வாக திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு சேர்த்து பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து மூன்று தினங்களுக்கு தினமும் இருவேளை குடித்து வந்தால் அதிகப்படியான மாதவிடாய் காலங்களில் ரத்த போக்கை கட்டுப்படுத்த முடியும். செரிமானமின்மை சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திப்பிலி அற்புதமாக குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திப்பிலி சிறப்பாக செயல்படுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது திப்பிலி ஆகும்.
இரத்தசோகை நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். திப்பிலி பொடியை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.
சர்க்கரை நோய் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது “இன்சுலின்” ஆகும். திப்பிலி பொடி சாப்பிடுபவர்களுக்கு கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு பெருமளவு நிவாரணம் அளிக்கிறது. தலைவலி சிலருக்கு உடலில் இருக்கும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளாலும், வேறு பல காரணங்களாலும் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திப்பிலி பொடி பயன்படுகிறது. மிகுந்த காட்டமான தன்மை கொண்ட திப்பிலி போடி சாப்பிட சிறிது நேரத்திலேயே தலைவலி முற்றிலும் நீங்குகிறது.
Thippili with healing power
Thippili is an herbaceous plant. Thippili has numerous medicinal properties. It has the power to cure many diseases in the body. It is used as an excellent remedy for muscle aches, diarrhea, leprosy, cough, phlegm, bronchitis and bronchitis.
Take equal amount of Thippilip powder and mustard powder and mix it with honey and take half a teaspoon twice a day in the morning and evening.
If you put distillate powder in cow's milk and drink it, you will get rid of cough and flatulence.
If you mix thippili with ghee and eat it, your manhood will increase. Take half a gram of roasted powder and mix it with honey and eat it twice a day to cure sore throat and loss of appetite.
Peel a squash, grate it and mix it with half a gram of honey and eat it three times a day.
Sinus, sneezing, headaches, etc. can be cured by taking 100 grams each of thippili, citronella, licorice and banankarkandu and grinding it and dipping it in two grams of honey daily.
Soak thippili in lemon juice, dry it, take two grams daily and mix it with honey to cure heartburn and belching.
Diphtheria Benefits Sore throat, hoarseness Colds, colds, etc. Thus becoming unable to speak properly. If you take a small amount of Thippili powder and eat it, it will clear the throat and improve the voice.
By constipation, by those who sit and work in one place constantly, the chances of getting sanctified etc. increase. Those caused by it can get relief by using thippili to heal it. Thoroughly powder the thippili and dry the juniper plant in the shade with it and mix it with thippili powder to cure it quickly. -
Liver and Spleen The liver and spleen do things like detoxify the food we eat, produce the necessary bile, and boost the immune system. Both of these organs are affected and inflamed by over-inflammation when the body is hit. Inflammation of such internal organs can be solved by consuming coastal flaxseed powder. Respiratory diseases such as asthma, bronchitis and bronchitis affect our lungs.
These diseases make it very difficult to breathe on average. Such diseases can be cured by mixing Coastal Thippali powder in hot milk and soon curing all the respiratory diseases affecting the chest and lungs. Fever occurs when the body's immune system is weakened, such as fever and chills. During these times, you can get rid of the disease by taking fresh medicines that can strengthen the body and cure diseases.
Infusion of Thippili, Sukku, Pepper, etc. can be taken with a decoction to get rid of any kind of fever and fever. Menopause During menstruation many women experience an increase in blood flow which makes them very physically weak.
The solution is to powder five parts of thyme and three parts of thyme seeds, mix it with rice washed water and drink it twice a day for three days to control excessive menstrual bleeding. Indigestion For some people, the food they eat causes poor digestion. Thippili miraculously cures such digestive disorders. Diphtheria works best as a remedy for constipation and as a bowel cleanser. Thippili is the solution to all stomach related problems.
Anemia We need to have a high number of red blood cells in our blood to prevent anemia. People who take thippili powder once a week increase the number of red blood cells and strengthen the immune system.
Insulin plays a major role in maintaining a balanced glucose level in the body. Thippili powder stimulates the pancreas, secretes insulin and helps control blood sugar levels, which is a great relief for diabetics. Headaches Some people have frequent headaches due to neurological disorders in the body and many other causes. Thippili powder is used as the best remedy for many types of headache problems. The headache disappears completely in a short time by eating the very bitter thippili bodi.
Post a Comment