மிளகு பயன்கள்

மிளகு நன்மைகள் (Milagu benefits in tamil)

"மிளகோட நன்மைகள் ... அது விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கு. அப்புறம்... பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தா இருக்கு. திரிதோஷம்னு சொல்லப்படுற வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு திரிகடுகு (சுக்கு-மிளகு-திப்பிலி) சூரணத்த தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா அந்த பிரச்சனைகள்ல இருந்து விடுபடலாம். திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தா இருக்குது.

.மிளகின் மேலும் சில மருத்துவ பயன்கள்:

மிளகில் அடங்கியுள்ள சத்துக்கள்:

கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள்

தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள்

மருத்துவ குறிப்புகள்:

(உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளுதல்)

             பசியின்மை - தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும்.

             செரியாமை - மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.

             ஜலதோஷத்தால் வந்த இருமல் - மிளகு கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும்.

             உடல் சூட்டினால் வரும் இருமல் - மிளகு பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து, கண்மையளவு 2 () 3 நாட்கள் எடுக்க தீரும்.

             உடல் நச்சுத்தன்மை நீங்க, விஷக்கடி நஞ்சுகள் நீங்க - மிளகு 10, வெற்றிலை 1, அருகம்புல் 1 கைப்பிடி - இடித்து போட்டு குடிநீரிட்டு குடித்து வரவும்.

             பூரான் கடி - வெற்றிலை சாறு 180 மிலியுடன் மிளகு 35 கிராம் சேர்த்து 1 நாள் முழுவதும் ஊற வைத்து பின் ஊறிய மிளகை உலர்த்தி பொடி செய்து பீங்கான் பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை இருவேளை 2 விரல் அளவு வெந்நீரில் எடுத்து வர பூரான் கடி விஷம் உடலில் நீங்கும். (பத்தியம்: உப்பு, புளி நீக்கல்)

             புழுவெட்டுக்கு - மிளகு, வெங்காயம், உப்பு - அரைத்து புழுவெட்டு உள்ள இடத்தில் பூசிவர முடி முளைக்கும் (புண் ஏற்பட்டால் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பூசிவர புண் ஆறிவிடும்)

             மிளகு இரசம் - தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும்.

             ஞா¬பகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் - மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞா¬பகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.

             சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும்.  வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.

 

             நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.

 

             மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.

 

             நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக  நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும்.

 

             கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

 

             சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன.  பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.

 வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட  வீக்கத்தைக் குறைக்கும்தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.

Uses of pepper:

" It breaks down toxins, suppresses arthritis, refreshes the nervous system, purifies the blood and warms the body. Then ... Pepper is a good medicine for ailments such as anorexia nervosa. Sukku-pepper-thippili) Suranatta honey can be mixed with food to get rid of those problems.

.Some more medicinal uses of pepper:

Nutrients in Pepper:

Calcium, Iron, Phosphorus nutrients

Vitamins like thiamine, riboflavin, niacin etc.

medical notes:

(Take before meals)

Anorexia - Daily consumption of 1/2 gram of pepper powder in warm water causes hunger. Increases saliva and helps digest food.

• Indigestion - Powder pepper, zucchini, thyme, fennel and indium in equal proportions and bring 1 gram twice in hot water to remove indigestion and stomach ailments.

 Cough from the common cold - Peppermint infusion should be drunk with palm sugar.

 Cough due to body heat - Add pepper powder to palm oil and knead for about 2 (a) 3 days.

 To get rid of body toxins, to get rid of poisonous toxins - 10 pepper, 1 betel leaf, 1 handful of adjoining - bring it down and drink it.

 Puran bite - Add 35 ml of pepper with 180 ml of betel juice and soak for 1 day and then dry the powdered pepper and keep it in a ceramic bowl. Take this powder in 2 fingers of hot water and it will remove the toxin from the body. (Verse: Salt and Tamarind Removal)

 For worm infestation - pepper, onion, salt - grind and apply on the affected area (sesame oil or coconut oil in case of ulcer will cure ulcer).

Pepper broth - If added to the daily diet will prevent stomach upsets and respiratory diseases. Increasing the functions of the brain.

Memory loss, body laziness, colds - Mix pepper powder with honey and take it twice a day to get rid of memory, laziness and colds.

If you have a cold or cough, you can recover from it using natural methods. Drink hot water. Hot water has the ability to reduce inflammation in the throat. It also helps to eliminate infections that cause colds and flu.

 Pepper has the role of increasing the performance of the heart, cold, lungs and digestive organs. People suffering from asthma are advised to chew five chillies daily.

 Cough will stop immediately if eaten with pepper or honey or cashew nuts. Five peppers with ten basil leaves, add 200 ml of water, boil and drink it to get rid of chest congestion.

• Pour a teaspoon of ghee with four garlic cloves and fry the garlic and eat it before it cools down. Finely chop the garlic and use in broth or soup. Eliminates colds and coughs in a natural way.

 Black pepper is a very good medicine for cough and cold. Drinking black pepper tea can reduce sore throat. In a cup of hot water add two tablespoons of honey and a pinch of black pepper. Close this as it is. You can drink this after 15 minutes.

 Adding turmeric to hot milk will get rid of mucus. Milk and turmeric contain many ingredients that can benefit our body. In general, drinking turmeric mixed with milk on days when there are no side effects like colds is healthy.

Rinse mouth with warm salt water. This is a natural process that does not cause any harm. Reduce swelling in the throat; Eliminates throat irritation; Reducing mucus.

Post a Comment

Previous Post Next Post