பசியைத் தூண்டுவதற்கு புதினாகீரை பெரிதும் உதவும். சிறுநீரைப் பெருக்கும், வாயுப் பிரச்சனையை நீக்கும். சுவையின்மைப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் வாந்தி வரும் உணர்வு இருப்பவர்களும், புதினாவை துவையலாகச் செய்து சாப்பிடலாம்.
புதினாவை நிழலில் காய வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் சமயங்களில், உலர்ந்த புதினா ஒரு கைப்பிடி எடுத்து, ஒன்றரை லிட்டர் நீர் சேர்த்து, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை, மூன்று, நான்கு மணி நேர இடைவேளையில் 30 - 60 மி.லி
குடித்துவந்தால், காய்ச்சல் சரியாகும்.
புதினாவுடன் உலர்ந்த பேரீச்சம்பழம், மிளகு, இந்துப்பு, உலர்ந்த திராட்சை, சீரகம் சம அளவு சேர்த்து, எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை, உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
காய்ச்சலின் போது ஏற்படும் வாய் கசப்பைப் போக்கும். ருசியை உணரவைக்கும்.
ஈரில் ரத்தம் வடிதல் பிரச்னை சரியாகவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும், புதினா இலையை, நிழலில் காயவைத்துப் பொடித்து, பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.
புதினா இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பெப்பர்மிண்ட் தைலத்தை போல இருக்கும். ஆனால், காரம் குறைவாக இருக்கும். இந்த எண்ணெயைத் தலைவலி வந்தால் தடவலாம். இந்த எண்ணெய்யை, சிறிதளவு நீரில் கலந்து உட்கொள்ள வயிற்றுவலி, வயிறு மந்தம் நீங்கி நன்றாகப் பசி எடுக்கும்.
புதினாவின் வாசனைக்கு, கொசுக்களை விரட்டும் தன்மை உண்டு. எனவே, வீட்டில் புதினா செடிகளை வளர்க்கலாம். புதினா கீரை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, தலையின் பக்கவாட்டில் தடவ, தலைவலி நீங்கும்.
தலைவலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பூசப்படும் களிம்புகளிலும் செரிமானக் கோளாறுகள், இருமல் ஆகியவற்றுக்கான மருந்துகளிலும் புதினா எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
Mint
helps greatly in stimulating appetite. Increases urination and eliminates gas
problem. Those who suffer from anorexia nervosa and have a feeling of vomiting
can wash and eat mint.
Mint
should be dried in the shade. In case of fever, take a handful of dried mint,
add one and a half liters of water and boil it for a quarter of a liter. If you
drink 30-60 ml of this water at intervals of three to four hours, the fever
will go away.
Add
equal amount of dried pepper, pepper, indium, raisins, cumin and mint to the
mint and grind with lemon juice. This can be eaten with food.
Bitterness
of the mouth during fever. Makes sense of taste.
To
correct the bleeding problem in the ear and to get rid of bad breath, mint
leaves can be dried in the shade and used as a toothpaste.
The
oil extracted from the mint leaf is similar to peppermint balm. But, the
alkalinity is low. You can apply this oil if you have a headache. This oil can
be mixed with a little water to relieve stomach ache and stomach cramps.
The
scent of mint has a repellent effect on mosquitoes. So, you can grow mint
plants at home. Mix a little honey with mint lettuce juice and apply on the
side of the head to get rid of headaches.
Mint
oil is used in ointments for headaches, joint pains, muscle cramps and in
medicines for digestive disorders and coughs.
Post a Comment