கற்பூரவல்லி பயன்கள்

கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்100 கிராம் கற்பூரவல்லியில் 4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் வைட்டமின் (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) உள்ளது.

ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.

கற்பூரவல்லி பயன்கள்

இருமல், சளி போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த இலையின் சாற்றை ஒரு ஸ்பூன் அளவுக்கு தினமும் காலையில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி பிரச்னை வராது. தலைவலி இருக்கும் சமயத்தில் கற்பூரவல்லி சாற்றையும் சிறிதளவு நல்லெண்ணெய்யும் கலந்து தலையில் பற்று போட்டால் வலி குறையும், குழந்தைகளுக்கு இந்த இலை சாற்றுடன் தேன் கலந்து கொடுக்கலாம். வாந்தி, அஜீரணம் பிரச்னைகள் இருந்தால் தீர்வு கிடைக்கும்.

கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள் , மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது ஆஸ்டியோபொராஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

புற்று நோய் உடலின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுகிறது. மார்பக புற்று நோய் மற்றும் பிரஸ்ட்ரேட் புற்று நோயுக்கு கற்பூரவள்ளி இலைகளில் நிறைந்திருக்கும் ஒமேகா – 6 வேதிப்பொருட்கள் இந்த வகையான புற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக புற்று நோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


IN ENGLISH:

Camphor  (Coleus aromaticus) is a medicinal herb. It grows into a bush. The fragrant leaves are thick and smooth, marginal, with sharp teeth. It has a bitter taste, alkalinity and odor and is widely grown in homes.

Nutrients 100 g of camphor contains 4.3 g of fat, 25 mg of sodium, 1,260 mg of potassium, 69 g of carbohydrates and 9 g of protein. It also contains Vitamin A (34%), Calcium (159%), Vitamin C (3%), Iron (204%), Vitamin B6 (50%) and Magnesium (67%).

One gram of camphor is found to be 42 times more rich in antioxidants such as vitamin A and vitamin C than apple. Thus camphor provides good protection from the impact of free radicals, prevents the appearance of aging and fights various skin diseases.

Benefits of Camphor

Used as a medicine for coughs and colds. Giving a spoonful of the juice of this leaf to children every morning will not cause colds. If you have a headache, you can mix camphor extract and a little bit of essential oil and apply it on the scalp to reduce the pain. For children, honey can be mixed with this leaf extract. If there are problems with vomiting and indigestion, the solution is available.

Camphor leaves are rich in omega 6, a chemical that promotes bone and joint health. Rubbing the ointment made from these leaves on the joints and bone areas will give better relief to those suffering from osteoporosis.

Cancer occurs in all parts of the body. Cancer researchers have found that omega-6 chemicals in camphor leaves are effective against breast cancer and prostate cancer.

Post a Comment

Previous Post Next Post